1 லட்சம் முதலீடு செய்தால் அதிக வட்டி :  சோதனையில் சிக்கிய நிதி நிறுவனம் !!

தமிழகம் முழுவதும் என இந்நிறுவனத்தின் உள்ள 21 கிளை அதிகாரிகளின் உரிமையாளர்கள் வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

1 லட்சம் முதலீடு செய்தால் அதிக வட்டி :  சோதனையில் சிக்கிய நிதி நிறுவனம் !!

அதிகவட்டி

வேலூர் மாவட்ட தலைமை இடமாக வைத்து செய்யப்பட்டு வந்த நிதி நிறுவனம் நடத்தி வந்த இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் நிறுவனம் என்ற நிதி நிறுவனம் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 8000 ரூபாய் வட்டி தரப்படும் என்று பல பேரிடம் பணம் பெற்று மோசடி செய்தது தொடர்பாக காஞ்சிபுரம் பொருளாதர குற்றப்பிரிவு போலீசார் மூன்று இடங்களில் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொருளாதார குற்றப்பிரிவு

காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரி அருகாமையில் உள்ள மின்மினி சரவணன் என்பவர் வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஐந்து பேர் கொண்ட குழு காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சோதனை

தமிழகம் முழுவதும் என இந்நிறுவனத்தின் உள்ள 21 கிளை அதிகாரிகளின் உரிமையாளர்கள் வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே, ஆருத்ரா நிறுவன மோசடி குறித்து விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், மேலும் ஒரு நிறுவனம் பொருளாதார குற்றப்பிரிவு சோதனையில் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.