வேளாண்துறை வளர்ச்சிக்கு ஆக்கமும், ஊக்கமும் தரும் பட்ஜெட் - வைகோ அறிக்கை!

வேளாண்துறை வளர்ச்சிக்கு ஆக்கமும், ஊக்கமும் தரும் பட்ஜெட் - வைகோ அறிக்கை!

வேளாண்துறை வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் தரும் பட்ஜெட் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 


2023 - 2024 ஆம் நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. பச்சை துண்டு அணிந்துக்கொண்டு நிதிநிலை அறிக்கையை வாசித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். 

இதையும் படிக்க : ஆஸ்கர் விருது வென்ற இயக்குனர் கார்த்திகி...1 கோடி பரிசு வழங்கி பாராட்டிய முதலமைச்சர்!

இந்நிலையில் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண் பட்ஜெட் தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் மூன்றாவது முறையாக தாக்கல் செய்யப்பட்டு உள்ள வேளாண் நிதிநிலை அறிக்கை, வேளாண்மைத் தொழில் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் தருவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உணவு தானிய உற்பத்தியில் இலக்கைத் தாண்டி சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டில், விவசாயிகளை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார்.