விரைவில் புதுக்கோட்டையில் ரூ.642 கோடியில் புதிய குடிநீர் திட்டம்...அமைச்சர் சொன்ன பதில் என்ன?

விரைவில் புதுக்கோட்டையில் ரூ.642 கோடியில் புதிய குடிநீர் திட்டம்...அமைச்சர் சொன்ன பதில் என்ன?

புதுக்கோட்டையில் 642 கோடி ரூபாயில் புதிய குடிநீர் திட்டம் தொடங்கப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு என அறிவித்துள்ளார். 

கடைசி நாள் பேரவைக்கூட்டம் :

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் கடந்த 9 ஆம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை அன்றைய தினம் ஆளுநர் உரையால் சர்ச்சையுடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து நடைபெற்று வந்த சட்டப்பேரவையின் கடைசி நாளாக இன்றும் சட்டப்பேரவை கூடியது. 

முதல் நிகழ்வு :

இதில் முதல் நிகழ்வாக, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் மற்றும் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ உக்கரபாண்டி ஆகியோர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து வினாக்கள்  விடைகள் நேரம் தொடங்கியது.

இதையும் படிக்க : கல்லூரி இல்லாத தொகுதிக்கு தான் முன்னுரிமை...அமைச்சர் பொன்முடி பதில்...!

அமைச்சர் பதில் :

அப்போது, புதிய குடிநீர் திட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, புதுக்கோட்டையில் 642 கோடி ரூபாயில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாகவும், கோவையில் அனைத்து சாலைகளையும் புதுப்பிக்க 200 கோடி ரூபாய் ஒதுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து, புதிய நகராட்சிகளுக்கு ஒரு கோடி ரூபாயும், புதிய மாநகராட்சிகளுக்கு 10 கோடி ரூபாயும் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.