டாஸ்மாக் வாகன ஒப்பந்ததாரர் கற்பூரம் ஏற்றி வேண்டுதல்...அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

டாஸ்மாக் வாகன ஒப்பந்ததாரர் கற்பூரம் ஏற்றி வேண்டுதல்...அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சர் மீதும், அவருடைய தம்பி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஒப்பந்ததாரர் கற்பூரம் ஏற்றி கடவுளிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.  

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை டாஸ்மாக் கிடங்கிலிருந்து  மதுபானங்களை  ஏற்றிச் செல்லும் ஒப்பந்தத்தை பாஸ்கரன் என்பவர் 25 ஆண்டுகளாக எடுத்து இயக்கி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் ஒப்பந்தம் முடிந்த நிலையில் புதிய ஒப்பந்த வாகனங்கள் வரும் வரை பாஸ்கரன் வாகனங்களை இயக்குமாறு கேட்டுக் கொண்டதன் பேரில் தனது வாகனங்களை இயக்கியுள்ளார்.  

இதையும் படிக்க : அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் வீடுகளில் சோதனை...பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக தகவல்!

இந்நிலையில், வழக்கம்போல் மதுபானங்களை ஏற்றிச் செல்ல சனிக்கிழமையன்று கிடங்கிற்கு வந்த பாஸ்கரன் வாகனங்களை டாஸ்மாக் அதிகாரிகள் உள்ளே அனுமதிக்காததால் ஏராளமான வழக்கறிஞர்களுடன் சென்று தனக்கு வழங்க வேண்டிய 5 கோடி ரூபாய் நிலுவையை கேட்டுள்ளார். அங்கிருந்த டாஸ்மாக் அதிகாரிகள் உயர் அதிகாரிகளிடம் பேசிவிட்டு தகவல் தெரிவிப்பதாகக் கூறியுள்ளனர்.

இதனால் கண்ணீருடன் வெளியே வந்த அவர், அருகில் இருந்த முனீஸ்வரன் கோயிலுக்கு சென்று கற்பூரம் ஏற்றி அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருடைய தம்பி அசோக் ஆகியோருக்கு கடவுள் தான் தண்டனை கொடுக்க வேண்டும் என்று முறையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.