பைக்கிலிருந்து நிலைதடுமாறி விழுந்த வாலிபர் : ஆம்னி பஸ் ஏறி தலை நசுங்கி உயிரிழப்பு !!

இருசக்கர வாகனம் ஓட்டி வந்த வாலிபர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் ஆம்னி பேருந்து ஏறி இறங்கி தலை நசுங்கி உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் பேருந்தை முற்றுகையிட்டு 100 அடி சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.

பைக்கிலிருந்து நிலைதடுமாறி விழுந்த வாலிபர் : ஆம்னி பஸ் ஏறி தலை நசுங்கி உயிரிழப்பு !!

சென்னை அரும்பாக்கம் பகுதி 100 அடி சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த வாலிபர் நிலை தடுமாறி கீழே விழுந்த போது பின்னே வந்த ஆம்னி பேருந்து ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூந்தமல்லி பகுதியை சேர்ந்தவர் அஸ்வின் வயது 25 இவர் விஸ்.காம் படித்துவிட்டு புகைப்படம் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இன்று மாலை தனது இல்லத்திலிருந்து புறப்பட்டு 100 அடி சாலை வழியாக கிண்டி நோக்கி சென்று கொண்டிருந்த போது சாலையில் பராமரிப்பு பணிக்காக மேலும் கீழுமாக இருந்த இடத்தில் இரு சக்கர வாகன இயக்கியபோது நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் பின்னே வந்த ஆம்னி பேருந்து வாலிபரின் தலை மீது ஏறி இறங்கியது இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் உடலை கைப்பற்றி அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் காட்சிகளை கைப்பற்றி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அஸ்வினின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பேருந்தை வழிமறித்து கற்களால் தாக்கியும் சாலை மறியலில் ஈடுபட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அரும்பாக்கம் காவல் ஆய்வாளர் பிரபு தலைமையிலான போலீசார் உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களை உடனடியாக கலைந்து செல்லும்படி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் 100 அடி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது பரபரப்பாக காணப்பட்டது.