ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இருந்து பின்வாங்கிய அமமுக...வெளியானது அதிகாரப்பூர்வ அறிக்கை!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இருந்து பின்வாங்கிய அமமுக...வெளியானது அதிகாரப்பூர்வ அறிக்கை!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை என்று அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகியுள்ளது.


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கிய நிலையில், திமுக, அமமுக, நாதக, ஒபிஎஸ் தரப்பினர் என பல்வேறு கட்சியினரும் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்து வந்தனர். 

இதையும் படிக்க : எது? கில்லி ஜோடி இனி இல்லையா? அப்போ 14 வருஷ தவம் எல்லாம் வீணா?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலால் சூடுபிடித்துள்ள தமிழ்நாடு அரசியல் களத்தில், இன்று அமமுக தாங்கள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்ற அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “ ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் அறிவிக்கப்பட்டு, களத்தில் பரப்புரை பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு கடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் ஒதுக்கப்பட்ட பிரஷர் குக்கர் சின்னத்தை, இடைத்தேர்தல் காலங்களில் ஒதுக்கிட இயலாது என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் ஓராண்டு காலத்திற்குள் வரவிருக்கும் சூழலில், புதியதோர் சின்னத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். ஆகவே, ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடவில்லை" என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.