கோடிக்கணக்கில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து வசமாக சிக்கினார் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி.....  

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.அவர் கிரிப்டோகரன்சியில் பல கோடிகளை முதலீடு செய்துள்ளதாக எப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது.

கோடிக்கணக்கில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து வசமாக சிக்கினார் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி.....  

தமிழக அரசு அதிரடியாக அதிமுக அமைச்சர் வீட்டில் தொடர்ச்சியாக ரெய்டுகள் நடைபெற்று வருவது அதிமுகவில் மேலும் திகிலை கிளப்பி உள்ளது.  ஏற்கனவே  அதிமுக அமைச்சர்கள், வேலுமணி, வீரமணி, கரூர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியனர். 

இந்த நிலையில் அடுத்தது முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் லஞ்சஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தங்கமணியின் சொந்த ஊர் பள்ளிபாளையம் அருகேயுள்ள ஆலம்பாளையம்.பி.ஏ. பட்டதாரியான  இவருக்கு சாந்தி என்ற மனைவியும் மற்றும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 2011ம் ஆண்டு குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.

2011ம் ஆண்டு தமிழக அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக பதவி வகித்தார். 2006ல் நடந்த தேர்தலில் திருச்செங்கோடு சட்ட மன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார். 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் குமாரபாளையம் சட்ட மன்றத் தொகுதியில் வெற்றி பெற்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.ஜெயலலிதா இறந்த பின் ஆட்சி சின்னா பின்னமாகிவிடுமோ என அ.தி.மு.க-வே தள்ளாடிய நேரத்தில்,ஊன்றுகோலாக இருந்து தாங்கிப் பிடித்தவர்களில் தங்கமணியும் ஒருவர்.

ஜெயலலிதா மறைவிற்கு பின் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் கட்சியிலும் ஆட்சியிலும் அதிகாரமிக்கவராகவே உருவெடுத்தார். தமிழ்நாட்டின் பிரச்சனைகளை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், அடிக்கடி டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்திக்கும் தமிழ்நாட்டின் முகமாகவும் இருந்து வந்தவர்.2021ம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் குமாரபாளையம் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.

அதிமுக அமைச்சர்கள் அடுத்தடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையின் வலையில் சிக்கி  வரும் நிலையில், எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ,கே.சி.வீரமணி ஆகியோரைத் தொடர்ந்து யார் அவர்களுடைய வலையில்  சிக்கப்போகிறார்கள் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுத்து வந்த நிலையில் முன்னாள் அமைச்சர் தங்கமணியை  வளைத்து பிடித்தது லஞ்ச ஒழிப்புத்துறை. லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டில் சிக்கும் 5வது முன்னாள் அதிமுக அமைச்சர் ஆவார்.


சென்னையில் 14 இடங்களிலும், நாமக்கல் உள்பட 9 மாவட்டங்களிலும், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய மொத்தம் 69 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகின்றது.சட்டசபை தேர்தலின் போது தங்கமணி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இருக்கும் சொத்து விவரங்கள் அடிப்படையில் இந்த ரெய்டு நடத்தப்பட்டது.

 அமைச்சர் பி,தங்கமணி, தனது பெயரிலும், குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மூலமும், 2016 முதல் 2020 வரையிலான பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளது என  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் தங்கமணி வருமானத்திற்கு அதிகமாக ரூ 4.85 கோடி சொத்தை  தன் மனைவி மற்றும் மகள் பெயரில் கடந்த 5 ஆண்டில் சேர்த்ததாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்து ரெய்டு செய்துள்ளது . முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மகன் தரணீதரன் 2வது குற்றவாளியாகவும், மனைவி சாந்தி 3வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.பொது நிதியை தவறாக பயன்படுத்தி இவர்கள் சொத்து குவித்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

சட்ட விரோதமாக சேர்த்த சொத்துக்களை இவர் கிரிப்டோ கரன்சியில் தங்கமணி முதலீடு செய்துள்ளதாகவும் போலீசார் எப்ஐஆரில் தெரிவித்துள்ளனர். பல கோடி சொத்துக்களை இவர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளதாக போலீசார் எப்ஐஆரில் தெரிவித்துள்ளனர்.அதிமுக அமைச்சர்களின் வீடுகளில் இப்படி தொடர் ரைடு நடப்பது மற்ற அதிமுக அமைசசர்களில் வயிற்றில் புளியை குறைப்பதாக உள்ளது. இன்னும் அதிமுகவில் எத்தனை அமைச்சர்கள் சிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கிரிப்டோகரன்சியில் இவர் முதலீடு செய்துள்ளதால் இந்த வழக்கு பெரிய அளவில்  விஸ்வரூபம் எடுக்கும் என கூறப்படுகிறது.