அதிமுக தலைமை அலுவலக கலவர வழக்கு.. 4 பேர் கொண்ட குழு..!

ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பி விசாரணையைத் தொடங்க திட்டம்..!

அதிமுக தலைமை அலுவலக கலவர வழக்கு.. 4 பேர் கொண்ட குழு..!

டிஎஸ்பி தலைமையில் விசாரணை: 

அதிமுக தலைமை அலுவலக கலவர வழக்கு தொடர்பாக விசாரிக்க டிஎஸ்பி தலைமையில் விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தலைமை அலுவலகத்தில் கலவரம்: 

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் ஜுலை 11ம் தேதி நடைபெற்ற போது கட்சியின் இடைக்கால செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்குச் சென்ற ஓபிஎஸ் ஆதரவாளர்கள், கட்சி நிதி மற்றும் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

விசாரணை குழு:

இதுதொடர்பாக இரு தரப்பில் இருந்தும் அளிக்கப்பட்ட புகார்களின் பேரில் 4 தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது இது தொடர்பாக விசாரிக்க விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளது.

4 பேர் கொண்ட குழு:

காவல் துணைக் கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் லதா, ரம்யா, ரேணுகா மற்றும் செல்வின் சாந்தகுமார் ஆகிய 4 பேர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்த விசாரணைக்குழு, கலவரத்தில் ஈடுபட்ட ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பி விசாரணையைத் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.