அதிமுக ஒரு திராவிட இயக்கமே இல்லை.. முப்பெரும் விழாவில் கனிமொழி எம்.பி விளாசல்..!

யார் தலைமைக்கு வருவது என்பதே அவர்களுக்கு பெரிய பிரச்சனையாக உள்ளது - கனிமொழி எம்.பி

அதிமுக ஒரு திராவிட இயக்கமே இல்லை.. முப்பெரும் விழாவில் கனிமொழி எம்.பி விளாசல்..!

முப்பெரும் விழா: 

சென்னை தென்மேற்கு மாவட்டம், திமுக சார்பில் சென்னை மயிலாப்பூரில் முப்பெரும் விழா மற்றும் பொது மேடையில் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலுரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

கனிமொழி எம்.பி பங்கேற்பு:

இதில், திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம். பி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் வேலு உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 

திமுக மட்டும் தான் எதிர்த்தது:

விழாவில் பேசிய எம்பி கனிமொழி, மத்திய அரசு இஸ்லாமியர்களுக்கு எதிராக சிஏஏ, விவசாயிகளுக்கு எதிராக வேளாண் சட்டத்தை கொண்டு வந்த போது திமுக மட்டும்தான் எதிர்த்ததாக தெரிவித்தார். 

திராவிட இயக்கம் அல்ல:

சிஏஏ, வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடாத அதிமுகவை திராவிட இயக்கமாக கருத முடியாது என்று கூறிய கனிமொழி, அதிமுக மக்கள் பிரச்சனைகளுக்காக போராடவில்லை என்றும் யார் தலைமைக்கு வருவது என்பதே அவர்களுக்கு பெரிய பிரச்சனையாக உள்ளது என்றும் சாடினார்.