அதிமுக தலைமையில் கூட்டணி உறுதி...பாஜக மாநில தலைவர் அதிரடி!

அதிமுக தலைமையில் கூட்டணி உறுதி...பாஜக மாநில தலைவர் அதிரடி!

மெகா கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்தில் எந்த தவறும் இல்லை என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

விஷமத்தனமான பிரசாரத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு:

சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த  பேசிய அவர், 10 சதவீத இடஒதுக்கீட்டில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால், தமிழ்நாட்டில் பலர் பலனடைவார்கள் எனக் கூறினார். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் முன்னேற்றத்திற்காக, மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு எதிராக, திமுக போன்ற சில கட்சிகள் விஷமத்தனமான பிரசாரத்தில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டி பேசினார்.

இதையும் படிக்க: நூறாண்டு கால போராட்டத்தின் பின்னடைவா? 10% இட ஒதுக்கீடு...முதலமைச்சர் பரபரப்பு அறிக்கை சொல்வது என்ன?

அரசியல் காழ்ப்புணர்ச்சியை தவிர்க்க வேண்டும்:

உச்சநீதிமன்றத்தின் இந்த சிறப்பான தீர்ப்பை, தமிழக பாஜக முழு மனதுடன் வரவேற்பதாக கூறிய அவர், இந்த விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியை தவிர்த்து விட்டு, அதை நடைமுறைப்படுத்தும் செயலில் திமுக அரசு ஈடுபட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

அதிமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை:

தொடர்ந்து, அதிமுக தலைமையில் மீண்டும் கூட்டணி அமைப்பதில் தங்களுக்கு எந்த குழப்பமும் இல்லை என விளக்கம் அளித்த அண்ணாமலை, மெகா கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்தில் எந்த தவறும் இல்லை என்று கூறினார். மேலும் 2024-ஆம் ஆண்டு தேர்தலின்  போது, பல கட்சிகளுக்கு முடிவுரை எழுதப்படும் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார்.