அதிமுக அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜுலை 11 ஆம் தேதி - அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன்

அதிமுக அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜுலை 11 ஆம் தேதி நடைபெறும் என அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்துள்ளார்.

அதிமுக அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜுலை 11 ஆம் தேதி - அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன்

பெரும் சர்ச்சைக்கு மத்தியில் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருந்த 23 தீர்மானங்களை தவிர்த்து புதிய தீர்மானங்களை நிறைவேற்ற நீதிமன்றம் தடை விதித்ததை தொடர்ந்து ஒற்றை தலைமை தீர்மானத்தை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இன்றைய பொதுக்குழுவில் 23 தீர்மானங்களில் சிலவற்றை மட்டும் நிறைவேற்றி மீண்டும் பொதுக்குழுவை நடத்த எடப்பாடி தலைமையிலான தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

ஆனால் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட இருந்த அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஒற்றை தலைமை தீர்மானத்துடன் சேர்த்து அனைத்து தீர்மானங்களும் அடுத்த பொதுக்குழுகூட்டத்தில் நிறைவேற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மேடையில் உரையாற்றிய அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜுலை 11 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்தார்.