மாநிலங்களவை இடங்களுக்கு திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி, ராஜேஷ்குமாரின் மனுக்கள் ஏற்பு

தமிழகத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை இடங்களுக்கு திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோரது மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றதால் எம்.பி பதவியை ராஜினாமா செய்த கே.பி. முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ஆகியோரது இடத்திற்கு திமுக சார்பில்  முறையே கனிமொழி சோமு மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அவர்களுடன் சுயேட்சையாக போட்டியிட அக்னி ஸ்ரீ ராமச்சந்திரன், பத்மராஜன்,  புஷ்பராஜ் ஆகியோரும் வேட்பு மனு  தாக்கல் செய்திருந்தனர். ஆனால் சட்டமன்ற உறுப்பினர்களின் முன்மொழிதல் இல்லாததால், சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. கனிமொழி மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோரது வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதன் மூலம், இருவரும் போட்டியின்றி மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுப்பது உறுதியாகியுள்ளது.