வருங்காலத்தில் ஆவின் பொருட்கள் ரேஷன் கடைகளில் கிடைக்க நடவடிக்கை - அமைச்சர் நாசர்

2 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் வருங்காலத்தில் ஆவின் பொருட்கள் ரேஷன் கடைகளில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார்.

வருங்காலத்தில் ஆவின் பொருட்கள் ரேஷன் கடைகளில் கிடைக்க நடவடிக்கை -  அமைச்சர் நாசர்

சட்டப்பேரவையில் பால்வளத்துதை மீதான மானியக்கோரிக்கை விவாதத்துக்கு பதிலுரை வழங்கிய அமைச்சர் நாசர், சென்னை ஆவின் பால் விற்பனை நாளொன்றுக்கு 1 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார்.

சேலம் கருமாந்துறையில் உயர் மரபியல் திறனுள்ள கிடேரிகள் வளர்க்கும் திட்டம் ரூ.6 கோடியில் செயல்படுத்தப்படும் என்றும், தமிழ்மொழிக் கல்வியில் 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் பால் உற்பத்தியாளர் வாரிசுகளுக்கு பரிசு வழங்கப்படும் என்றும்,

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 3 சிறந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்படும் என்றும் கூறிய அமைச்சர், கடலூர் பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் 1 லட்சம் லிட்டர் பால் கையாளும் மையம் ரூ. 30 கோடியில் அமைக்கப்படும் என்றும் இமைச்சர் கூறியுள்ளார். மேலும் தேர்தல் வாக்குறுதிப்படி பால் விலை குறைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்