100 நாட்கள் முடியும் வரை விமர்சிக்க மாட்டேன்… திமுக ஆட்சி குறித்து நடிகர் எஸ்.வி.சேகர் பேச்சு!  

திமுகவின் அரசு இதுவரை சிறப்பாக செயல்பட்டு வருவதாக நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

100 நாட்கள் முடியும் வரை விமர்சிக்க மாட்டேன்… திமுக ஆட்சி குறித்து நடிகர் எஸ்.வி.சேகர் பேச்சு!   

திமுகவின் அரசு இதுவரை சிறப்பாக செயல்பட்டு வருவதாக நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பலர் அடையாரில் உள்ள சிவாஜி கணேஷன் மணிமண்டபத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் அவரின் முதல் மகனான ராம்குமார் மற்றும் நடிகர் எஸ்.வி சேகர் ஆகியோர் சிவாஜி கணேசனின் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நடிகர் எஸ்.வி.சேகர், நடிகர் திலகம் சிவாஜி ஒரு நடிகர் மட்டுமல்ல அவர் ஒரு சிறந்த தேசியவாதியாக இந்தியா மீது பற்று கொண்டவர்.  இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே போர் நடைபெற்ற பொழுது பல நிதிகளை வசூலித்து கொடுத்தவர்.  நடிகர் திலகம் சிவாஜி. தேசிய வாதி என்ற ஒரு விஷயத்திலிருந்து அவர் தன்னை மாற்றிக் கொண்டது இல்லை என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், இதுவரை திமுகவின் ஆட்சி சிறப்பாக உள்ளது. 100 நாள் வரைக்கும் எந்த ஒரு விமர்சனத்தையும் வைக்க வேண்டாம் என்று உள்ளேன். காரணம் எந்த ஒரு அரசும் ஆட்சிக்கு வந்தவுடனேயே தங்களுடைய செயல்களை வைப்பார்கள். அதேபோல் மு.க.ஸ்டாலின் அரசும் தொற்றுநோய் காலத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இது போன்ற சமயத்தில் தொற்றுநோயில் இருந்து மக்களை காப்பாற்றுவதில் மட்டும் தான் கவனத்தை செலுத்த முடியும். எல்லாத் துறைகளிலும் கவனத்தை செலுத்த முடியாது. அதையும் காலையில் எழுந்தவுடனேயே விமர்சித்துக் கொண்டே இருந்தால் வெற்று அரசியலாக தான் இருக்கும் என்றார்.