கூடுதல் தளர்வுகள்.... முதலமைச்சர் நாளை ஆலோசனை

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

கூடுதல் தளர்வுகள்.... முதலமைச்சர் நாளை ஆலோசனை

தமிழகத்தில் திமுக அரசின் தீவிர தடுப்பு நடவடிக்கையினால் கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஊரடங்கு தளர்வுகள் குறித்து முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது.

இதில், தலைமைச் செயலாளர், மூத்த ஐ.ஏ. எஸ். அதிகாரிகள், சுகாதாரத் துறை, வருவாய் நிர்வாகத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 20-ம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முன்கூட்டியே இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. வார இறுதிநாட்களில் கோவில்களில் பக்தர்களை அனுமதிப்பது, விஜயதசமி அன்று கோவில்களை திறப்பது குறித்தும், பண்டிகைகளையொட்டி கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.