கொரோனா தொற்றுக்கு பின் இளைஞர்கள் அதிகளவில் மாரடைப்பால் உயிரிழக்கின்றனர் - மா.சுப்பிரமணியன்!

கொரோனா தொற்றுக்கு பின் இளைஞர்கள் அதிகளவில் மாரடைப்பால் உயிரிழக்கின்றனர் - மா.சுப்பிரமணியன்!

கொரோனா தொற்றுக்கு பின் இளைஞர்கள் அதிகளவில் மாரடைப்பால் உயிரிழப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னையில் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள தாஜ் வெலிங்டன் மிவ்ஸ் ஹோட்டலில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் காசநோய் உச்சி மாநாட்டை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து 2.0 மாநில காசநோய் திட்ட ஆவணத்தை அமைச்சர் வெளியிட்டார்.

இதையும் படிக்க : பொறியியல் கலந்தாய்வு தேதியை அறிவித்தார் அமைச்சர் பொன்முடி...!

பின்னர் மாநாட்டில் பேசிய உலக சுகாதார அமைப்பின் முன்னாள் மூத்த உறுப்பினர், மருத்துவர் சௌமியா சுவாமிநாதன், கொரோனா தொற்றின் தாக்கத்தால் உயிரிழப்புகள் பெருமளவு குறைந்துள்ள நிலையில், உலக அளவில் காசநோய்க்கு தினமும் 1000 பேர் உயிரிழப்பதாக எச்சரிக்கை விடுத்தார். மேலும், தமிழகத்தில் மதுரை, தேனி, பெரம்பலூர், அரியலூர் போன்ற மாவட்டங்களில் காசநோய் பாதிப்பு அதிகமாக உள்ளதாக சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்

இவரைத்தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உலகில் மிகப்பெரிய அளவில் உயிரிழப்பு உண்டாக்கும் நோயாக காசநோய் இருப்பதாகவும், இதற்கு தகுந்த சிகிச்சை எடுத்து கொண்டால் தான் முழுமையாக குணம் அடைய முடியும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கொரோனா தொற்றுக்கு பின் இளைஞர்கள் அதிகளவில் மாரடைப்பால் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா பேரிடருக்கு பிறகு உயிரிழப்புகள் அதிகரித்து வருவதை மருத்துவ வல்லுநர்கள் ஒப்புக்கொண்டுள்ளதால், உரிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.