காற்றின் தரம் அறிய மேலும் 5 கண்காணிப்பு நிலையம் : மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் !!

சென்னையில் காற்றின் தரத்தினை கண்காணித்திட மேலும் 5 இடங்களில் நிகழ்வு நேர கண்காணிப்பு நிலையம் அமைக்க சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காற்றின் தரம் அறிய மேலும் 5 கண்காணிப்பு நிலையம் : மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் !!

மாநகராட்சி மாமன்ற கூட்டம்

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாமன்ற கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.

தீர்மானம்

இந்த கூட்டத்தில் 98 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு நிலையில், சென்னையில் காற்றின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் மேலும் ஐந்து இடங்களில் காற்றின் தரத்தினை கண்காணித்திட நிகழ்வு நேர கண்காணிப்பு நிலையம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காற்று மாசுபாடு

சென்னையில், மத்திய மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பட்டு வாரியத்தின் மூலம், ஆலந்தூர், வேளச்சேரி, பெருங்குடி, அரும்பாக்கம், ராயபுரம், கொடுங்கையூர் மற்றும் மணலி ஆகிய இடங்களில் நிகழ்வு நேர கண்காணிப்பு நிலையம் அமைக்கப்பட்டு காற்றின் தரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கண்காணிப்பு நிலையம்

தேசிய சுத்தமான காற்று திட்டத்தின் மூலம் சென்னை நகரத்தில் காற்றின் தரத்தினை மேம்படுத்திட  மத்திய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. இதனை பயன்படுத்தி சென்னை மாநகராட்சி பல்வேறு வகையிலான நடவடிக்கைகளை மேம்படுத்தியதன் மூலம் சென்னையில் கடந்த ஆண்டு வெயில் காலத்தில் இருந்த அளவை விட இந்த ஆண்டு காற்று மாசு குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் கூடுதலாக 5 இடங்களில் நிகழ்வு நேர கண்காணிப்பு நிலையம் அமைக்க சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மொத்தம் 7 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து அமைக்கப்படவுள்ளது. நான்கு நிலையத்தினை மாசுக்கப்பட்டு வாரியம் அமைக்கிறது. ஒரு நிலையத்தை மாநகராட்சியும் அமைக்கவுள்ளது.