அலர்ட்..அலர்ட்.. 22 மாவட்டங்களுக்கு அலர்ட்.. இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பாம்.. உங்க ஏரியா எது?

 வடகிழக்கு பருவமழை 2 வாரங்கள் காலதாமதமாக துவங்க உள்ளது..!

அலர்ட்..அலர்ட்.. 22 மாவட்டங்களுக்கு அலர்ட்.. இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பாம்.. உங்க ஏரியா எது?

22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:

தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இடி மின்னலுடன் : 

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சேலம் முதல் காஞ்சிபுரம் வரை:

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

டெல்டா மாவட்டங்கள்:

மேலும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு:

சென்னையை பொறுத்தவரை, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

2 வார தாமதம்:

இதனிடையே, அக்டோபர் இறுதி முதல் வடகிழக்கு பருவமழை துவங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வழக்கமாக அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும்  வடகிழக்கு பருவமழை 2 வாரங்கள் காலதாமதமாக துவங்க உள்ளது.