நித்தியானந்தா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை.. திருச்சி சூர்யாவுக்கு தர்மரட்சகர் விருது..!

ஆன்லைன் வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி சூர்யாவுக்கு விருது அறிவிப்பு..!

நித்தியானந்தா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை.. திருச்சி சூர்யாவுக்கு தர்மரட்சகர் விருது..!

நித்தியானந்தா:

நித்தியானந்தா.. மதுரை மடத்தின் ஆதீனமாக இருந்திருக்க வேண்டியவர், நடிகை ரஞ்சிதாவுடன் தனிமையில் இருந்ததாக வெளியான வீடியோ சர்ச்சையில் சிக்கி பெங்களூரு பக்கம் தனி மடம் ஆரம்பித்து, சீடர்கள், பக்தர்களுடன் இருந்து வந்தார். அங்கேயும் பல பாலியல் சிக்கல்களில் சிக்கி, கைது செய்யப்பட வேண்டிய நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறினார். 

கைலாசா நாடு:

இன்று அவர் எங்கிருக்கிறார் என்பதே யாருக்கும் தெரியாத ரகசியமாக இருந்து வருகிறது. ஈகுவடார் தீவு அருகே ஏதோ ஒரு பகுதியை விலைக்கு வாங்கி, அங்கு கைலாசா என்ற தனி நாட்டையே உருவாக்கி விட்டதாகவும், அந்நாட்டிற்கு என தனி கொடி, பணம், பாஸ்போர்ட் என அனைத்தையும் உருவாக்கி விட்டதாகவும் அவரே சமூக 
வலைதளங்கள் மூலம் தெரிவித்தார். 

இலங்கையிடம் மருத்துவ உதவி:

ஒவ்வொரு நாளும் அங்கிருந்தவாறே சமூக வலைதளம் மூலம் தமிழ்நாட்டில் நடக்கும் பலவற்றையும் அவரது சீடர்களின் உதவியுடன் செய்து வருகிறார் நித்தியானந்தா. தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நித்தியானந்தா, இலங்கையிடம் மருத்துவ உதவி கேட்டு நாடியிருந்தார். 

திருச்சி சிவாவின் மகன் சூர்யா:

இந்த நிலையில், நித்யானந்தா மீதான குற்றச்சாட்டுகள் நூறு சதவீதம் தவறானவை என்று திருச்சி சூர்யா சிவா கூறியுள்ளார். திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினரான திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா. சமீபத்தில் அவர் பாஜகவில் இணைந்தார். அவருக்கு அங்கு ஓபிசி பிரிவின் மாநில பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

சூர்யாவுக்கு தர்மரட்சகர் விருது:

நித்தியானந்தா ஆசிரமம் சார்பில் ஆன்லைனில் நடைபெற்ற கைலாசா விருது வழங்கும் விழாவில் உரையாற்றிய நித்தியானந்தா, தமிழ்நாடு பாஜக ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா சிவாவுக்கு ”தர்மரட்சகர்” விருதை அறிவித்தார். 

நித்தி மீதான குற்றச்சாட்டுகல் நிரூபிக்கப்படவில்லை:

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சூர்யா சிவா, நித்யானந்தா மீது ஆயிரம் சர்ச்சைகள் இருந்தாலும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். இவரது இந்த பேச்சு அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்களிடத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.