நிலத்தை உழவு செய்யாமல் மாற்றுப்பயிரை விதைக்கும் கருவி.. தென்னிந்தியாவில் முதல்முறையாக அறிமுகம்

கும்பகோணத்தில், அறுவடைக்குப் பின் நிலத்தை உழவு செய்யாமல் மாற்றுப் பயிர்கள் விதைக்கும் கருவி தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக ஆடுதுறையில் அறிமுகப்படுத்தப்பட்டது. 

நிலத்தை உழவு செய்யாமல் மாற்றுப்பயிரை விதைக்கும் கருவி..   தென்னிந்தியாவில் முதல்முறையாக அறிமுகம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறையில் நிலத்தில் உழவு செய்யாமல் மாற்றுப் பயிர்கள் விதைக்கும் கருவி குறித்த கருத்தரங்கம் மற்றும் செயல்முறை விளக்கம் நடைபெற்றது.

தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் மற்றும் கோவை மத்திய வேளாண்மை பொறியியல் நிலையம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 25க்கும் மேற்பட்ட வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.

இதில், நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனர் அம்பேத்கார் தலைமை ஏற்று, கருவியின் முக்கியத்துவத்துவம் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் விளக்கம் அளித்தார். அறுவடை முடிந்து, நிலம் ஈரம் காயும் முன்னரே, நிலத்தை உழவு செய்யாமல், உளுந்து பயிர்கள் விதைக்கப்பட்டன. இதற்கான பிரத்யேக இயந்திரம் தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக ஆடுதுறையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் குறைந்த செலவில் அதிக லாபம் பெற முடியும் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.