மகன் மத்திய அமைச்சரானாலும் நான் எப்போதும் கூலி தொழிலாளி தான்.! நெகிழும் எல்.முருகனின் தந்தை.! 

மகன் மத்திய அமைச்சரானாலும் நான் எப்போதும் கூலி தொழிலாளி தான்.! நெகிழும் எல்.முருகனின் தந்தை.! 

1977ல் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகிலிருக்கும் கோனூரில் பிறந்த எல். முருகன், சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்த பிறகு, சென்னைப் பல்கலைக்கழத்தில் சட்ட முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். அதற்குப் பிறகு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.

வழக்கறிஞரான பின் சென்னைக்கு இடம்பெயர்ந்த எல்.முருகன் அங்கு ஆர்.எஸ்.எஸில் இணைந்து பாஜகவின் அக்கட்சியின் பட்டியலினத்தோர் பிரிவின் தேசிய பொதுச் செயலாளராக இருந்தார். அதன்பின் 2018ஆம் ஆண்டில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட அவர் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். 

அதில் சிறப்பாக செயல்பட காரணத்தால் மத்திய இணையமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது தந்தை மற்றும் தாய் கோனூரிலே தொடர்ந்து விவசாய கூலிகளாக வேலைசெய்கிறார்கள் . இது குறித்து அவரது தந்தை கூறுகையில், உயர் நீதிமன்ற வழக்கறிஞரான பிறகு என்னை தன்னோடு சென்னைக்கு வந்து விட சொன்னார். ஆனால், நான் தான் தொடர்ந்து கூலி வேலை செய்து என்னை பார்த்துக்கொள்கிறேன் என்று கூறினார். மேலும் மகன் மத்திய அமைச்சரானது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார்.