சிங்கார சென்னை உணவுத் திருவிழா : அடுப்பில்லாமல் சமைத்து அசத்திய மாணவர்கள் !!

சென்னை தீவுத்திடல் "சிங்கார சென்னை உணவுத் திருவிழாவில்" அடுப்பில்லா சமையல் என்ற பெயரில் 1500 மாணவர்கள் உலக சாதனை படைத்துள்ளனர்.

சிங்கார சென்னை உணவுத் திருவிழா :  அடுப்பில்லாமல் சமைத்து அசத்திய மாணவர்கள் !!

உணவுத் திருவிழா

சென்னை தீவுத்திடலில் உணவு பாதுகாப்புத்துறை சென்னை சார்பில் நடைபெற்று வரும் 'சிங்கார சென்னை உணவுத் திருவிழாவின் 2-வது நாளான இன்று பள்ளி மாணவர்களுக்கு உணவு தொடர்பான பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இந்நிகழ்வில்  சிறப்பு விருந்தினர்களாக சமையல் கலைஞர் தாமு, நடிகர் இமான் அண்ணாச்சி, பட்டிமன்ற பேச்சாளர் சசி லயா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அடுப்பில்லாமல் சமைத்து 1500 பள்ளி மாணவர்கள் TRUMPH உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்று சாதனை படைத்தனர். 

உறுதிமொழி

இந்நிகழ்வில் பள்ளி மாணவர்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்தும் பாரம்பரிய உணவுகளின் பெருமை குறித்தும் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. மேலும் பாரம்பரிய உணவுகளை உட்கொள்வோம் என சமையல் கலைஞர் தாமு வாசிக்க மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் மாணவர்களிடையே பேசிய பட்டிமன்ற பேச்சாளர் சசிலாயா, தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும். மாணவர்கள் எந்த பிரச்சனையாக இருந்தாலும் பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும் என மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஆலோசனைகளை வழங்கினார். 

அசத்திய மாணவர்கள்

நிகழ்ச்சியின் ஒரு பகுதியில் சினிமா பாடல்களை ஒலிபரப்ப மாணவர்கள் உற்சாமாக நடனமாடினர். விழாவின் ஒரு பகுதியாக பள்ளி மாணவ மாணவிகள் மாலை நேரங்களில் உண்ணக்கூடிய நொறுக்கு தீனிகளுக்கு பதிலாக சத்தான உணவுகளை தாமாகவே செய்து உண்ணும் வகையில் வழிகாட்டுதல்கள் வழங்கும் விதமாக அடுப்பில்லா சமையல் என்ற பெயரில் புதிய முயற்சியாக பல்வேறு உணவு வகைகள் செய்து சாதனை செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

அதாவது அடுப்பின்றி மாணவர்களே தாமாக மாலை நேரங்களில் தங்களுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகளை தயாரிக்கும் விதமாக சத்துமாவு உருண்டை, சிறுதானிய உருண்டை , பிரட் சாலட், ஃப்ரூட் சாலட் , மசாலா பயிறு உள்ளிட்ட 10 வகையான தின்பண்டங்கள் மாணவர்களே செய்யும் வண்ணம் பயிற்சி வழங்கப்பட்டு ஒரே நேரத்தில் மாணவர்கள் தின்பண்டங்களை செய்து சாதனை படைத்தனர். 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே நேரத்தில் உணவு சமைத்த இந்த நிகழ்ச்சி டிரையம்ப் உலக உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.