ரஃபேல் வாட்ச் சர்ச்சை...என் உயிருள்ளவரை நான் கட்டியிருப்பேன் ஏனென்றால்...விளக்கமளித்த அண்ணாமலை!

ரஃபேல் வாட்ச் சர்ச்சை...என் உயிருள்ளவரை நான் கட்டியிருப்பேன் ஏனென்றால்...விளக்கமளித்த அண்ணாமலை!

அண்ணாமலையின்  வாட்ச் குறித்து டிரெண்டாகி வரும் கேள்விக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கமளித்தார். 

வாட்ச் குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள்:

கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று டிசம்பர் 17 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம், சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் அண்ணாமலை கையில் கட்டியுள்ள 3.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாட்ச் குறித்து கேள்வி எழுப்பினர்.

பதிலளித்த அண்ணாமலை:

அதற்கு பதிலளித்த அவர், ”சமீபகாலமாகவே, நாம் அணியும் சட்டை, வேட்டி கார் என எல்லாவற்றையும் ஒப்பிடுவதைத்தான் வழக்கமாக கொண்டு வருகின்றனர்” என்று கூறிய அவர், நான் கையில் கட்டியிருக்கும் வாட்ச், ரஃபேல் விமானங்களை இந்தியா ஆர்டர் செய்தபோது, அந்த விமானத்தின் பாகங்களை வைத்து 500 வாட்ச்கள் செய்யப்பட்டன. அதில் 149 வது வாட்ச்சை தான் நான் கையில் கட்டியிருப்பதாக தெரிவித்தார்.

இதையும் படிக்க: காசு பணத்தை விட...ஒவ்வொருவரும் இதில் தான் சாதிக்கின்றனர்...அன்பில் மகேஷ் சொல்வது என்ன?

ரஃபேல் வாட்ச்:

ரஃபேல் விமானத்தில் என்னவெல்லாம் பாகங்கள் இருக்கிறதோ, நான் கட்டியிருக்கும் வாட்ச்சிலும் அந்த பாகங்கள் எல்லாம் இருப்பதாகவும், இது ஒரு கலெக்டட் ஸ்பெஷல் எடிஷன் என்றும், இதன் பெயரே ரபேஃல் ஸ்பெஷல் எடிஷன் என்றும் கூறினார்.

நான் ஒரு தேசியவாதி:

தொடர்ந்து, எனக்கு ரஃபேல் விமானத்தை ஓட்டக்கூடிய பாக்கியம் கிடைக்கவில்லை. அதனால் தான் விமானத்திற்கு பக்கத்தில் இருக்கும் இந்த ரஃபேல் வாட்ச்சை கட்டியிருப்பதாகவும், ஏனென்றால் நான் ஒரு தேசியவாதி, அதனால் இந்த வாட்சை என் உயிர் உள்ளவரை கையில் கட்டியிருப்பேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கமளித்தார்.