சாப்பாட்டுக்கு உப்பு போட்டு சாப்புடுற ஆளாக இருந்தால்  அண்ணாமலை ஆதாரத்தை வெளியிட வேண்டும்..அமைச்சர் செந்தில்பாலாஜி சாடல்

சாப்பாட்டுக்கு உப்பு போட்டு சாப்புடுற ஆளாக இருந்தால்  4 சதவீத கமிஷன் குறித்த ஆதாரத்தை அண்ணாமலை வெளியிட வேண்டும் என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கடுமையாக சாடியுள்ளார்

சாப்பாட்டுக்கு உப்பு போட்டு சாப்புடுற ஆளாக இருந்தால்  அண்ணாமலை ஆதாரத்தை வெளியிட வேண்டும்..அமைச்சர் செந்தில்பாலாஜி  சாடல்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த மின் துறை அமைச்சர் செய்தில்பாலாஜி கூறுகையில், பாஜக தலைவர் அண்ணாமலை நல்ல மனிதராக இருந்தால். சாப்பாட்டில் உப்பு போட்டு சாப்பிடும் ஆளாக இருந்தால், 4 சதவீத கமிஷன் குறித்த ஆதாரத்தை பா.ஜ.க  வெளியிட வேண்டும் ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்றும் ஆதாரம் இல்லாமல் இருப்பை காட்ட அவர் பேசுகின்றார் என்றார்.

மேலும் டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானம் விற்ற134 பேர் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறினார். ஆட்சி பொறுப்பேற்று 5 மாத காலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்றார்.