10 ஆண்டுகளில் ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

தமிழ்நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

10 ஆண்டுகளில் ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்  2021-22 நிதியாண்டுக்கான முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், 
தமிழகத்தில் நீர் பாசனத்திற்கென 6 ஆயிரத்து 607 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநில நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

இதனை பயன்படுத்தி அடுத்த 10 ஆண்டுகளில் ஆயிரம் தடுப்பணைகளை கட்டவுள்ளதாகவும்,  அணை நீர் தேக்க கொள்ளளவை பழைய நிலைக்கு உயர்த்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.  

அதுமட்டுமல்லாது முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசுடன் ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தையில் மாநில அரசு ஈடுபடும் எனவும் தெரிவித்துள்ளார். இதனுடன் 200 குளங்களை தூர்வாரி சீரமைக்க 111 கோடி ரூபாய் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் 30 கோடி ரூபாயில் தமிழ்நாடு நீர்வள தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பினை செயல்படுத்த உள்ளதாகவும் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.