ஈ.பி.எஸ்-க்கு மேலும் ஒரு மாவட்ட செயலாளர் ஆதரவு : ஓ.பி.எஸ்-க்கு 6 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே ஆதரவு !!
அதிமுக-வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் இ.பி.எஸ்-க்கு மேலும் ஒரு மாவட்ட செயலாளர் தனது ஆதரவை வழங்கியுள்ளார்.

தமிழகம் முழுவதும் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என கோரிக்கை எழுந்து வரும் நிலையில் இரு அணிகளாக உள்ள ஓபிஸ், ஈபிஸ் ஆகியோரின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
நாளை அதிமுக பொதுக்குழு கூட உள்ளது. இதில் ஒற்றை தலைமை தொடர்பான தனித்தீர்மானத்தை கொண்டுவர பழனிச்சாமி திட்டமிட்டுள்ளார். ஓபிஎஸ்-சுக்கு கிட்டதட்ட 15 மாவட்ட செயலாளர்களின் ஆதரவு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது ஓபிஎஸ் ஆதரவாளர்களாக இருந்த பலரும் ஈபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதனால், ஒற்றைத் தலைமை விவகாரத்தில் நாளுக்கு நாள் ஈபிஎஸ்க்கு ஆதரவு பெருகி வருகிறது. இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு மாவட்ட செயலாளர் தனது ஆதரவை ஈபிஎஸ்க்கு வழங்கியுள்ளார். அதன்படி மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான வேளச்சேரி அசோக் இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை இன்று அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து தனது ஆதரவை வழங்க உள்ளார்.
இதனால் ஒரு பக்கம் இ.பி. எஸ்-க்கு ஆதரவு பெருகி வரும் அதேவேளையில் மறு பக்கம் ஓபிஎஸ்க்கு ஆதரவு சரியை கண்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி ஓ.பி.எஸ்க்கு 6 மாவட்ட செயலாளர்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. இதனிடையே அதிமுக முன்னாள் அமைச்சர்களான அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் டி.கே.எம் சின்னையா இபிஎஸ் இல்லம் வருகை தந்துள்ளனர்.