தகுதியான ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் உள்ள வழிமுறைகளின்படி தகுதியான ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தகுதியான ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ரவி என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் 2ம் நிலை ஆசிரியர் பணிக்காக 8 ஆண்டுகள் காத்திருந்த நிலையில், பள்ளி நிர்வாகக்குழு மூலம் ஆசிரியர் நியமனம் நடைபெறுவது விதிகளுக்கு முரணானது என குறிப்பிட்டிருந்தார்.

அப்போது தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களே தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதாக தமிழக அரசு விளக்கமளித்தது.

இந்நிலையில், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றது உள்ளிட்ட தகுதிகளுடன் வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.

பட்டப்படிப்பை மட்டும் முடித்த விண்ணப்பங்கள், இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் பணியாற்றுவோர் உள்ளிட்ட விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்கக் கூடாது எனவும் தெரிவித்தார். இந்த நியமனங்கள் தற்காலிகமானது எனக்கூறிய அவர், கல்வி பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தகுதியானோருக்கு மட்டுமே பணி வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.