திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதியா?  

திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து, முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, கிரிவலப் பாதையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 100க்கும் மேற்பட்ட குளங்கள் கண்டறியப்பட்டு மீட்கப்படும் என்றும், கிரிவலப்பாதையில் உள்ள மின்கம்பங்களுக்கான மின் கட்டணத்தை அறநிலையத்துறை ஏற்கும் எனவும் கூறினார்.

மேலும், தீபத்திருவிழாவில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து ஆய்வு மேற்கொண்ட பின் முதலமைச்சரின் ஆலோசனைப்படி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.