அம்மா உணவகங்கள் அழிவை நோக்கிச் செல்கிறதா? கமல் கேள்வி

அம்மா உணவகங்கள் அழிவை நோக்கிச் செல்கின்றனவா என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அம்மா உணவகங்கள் அழிவை நோக்கிச் செல்கிறதா? கமல் கேள்வி

அம்மா உணவகங்கள் அழிவை நோக்கிச் செல்கின்றனவா என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அம்மா உணவகங்களில் சப்பாத்திக்குப் பதில் தக்காளி சாதம் வழங்கப்படுவதாகவும், அங்கு பணியாற்றும் ஊழியர்களை திடீரென பணி நீக்கமும், பணியிட மாற்றமும் செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இரவு நேர உணவு முறையில் மாற்றம் செய்துள்ளதாகவும், பணியாட்களைக் குறைத்து வருவதாகவும் வெளிவரும் தகவல்கள் கவலையளிப்பதாக கமல் கூறியுள்ளார். எனவே அம்மா உணவகம் தொடர்ந்து ஆரோக்கியமான முறையில் சிறப்பாகச் செயல்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கமல் கேட்டுக் கொண்டுள்ளார்.