அரும்பாக்கம் கொள்ளை வழக்கு: எப்படியெல்லாம் பிளான் பன்னிருக்காங்க..! நகைகளின் கதி?

கொள்ளையின் போது வங்கியின் இணைய சேவையை துண்டித்துள்ளார் முக்கிய குற்றவாளி முருகன்..!

அரும்பாக்கம் கொள்ளை வழக்கு: எப்படியெல்லாம் பிளான் பன்னிருக்காங்க..! நகைகளின் கதி?

தனியார் வங்கியில் கொள்ளை: சென்னை அரும்பாக்கத்தில் இயங்கி வரும் பெட் கோல்டு லோன்ஸ் வங்கியில், மூன்று நாட்களுக்கு முன்பு சுமார் 32கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. 

5 பேர் கைது: வங்கியில் பணிபுரிந்த முருகன் என்ற ஊழியரே, நண்பர்களுடன் சேர்ந்து திருட்டு சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. இந்த வழக்கில் முக்கிய கொள்ளையன் முருகன், அவரது கூட்டாளிகள் சூர்யா, சந்தோஷ், பாலாஜி, சக்திவேல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

முழு தங்கமும் மீட்பு: முதற்கட்டமாக 18 கிலோ தங்கம் மீட்கப்பட்டது. மீதமுள்ள 13 கிலோ நகைகளை தனது கூட்டாளி சூர்யாவிடம் கொடுத்து அனுப்பியதாக முருகன் கூறியதன் அடிப்படையில், விழுப்புரத்திற்கு விரைந்த போலீசார், தங்கத்தை மீட்டனர். இந்த வழக்கில், வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 31 கிலோ 700 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

கோவையில் தனிப்படை போலீசார்: மேலும் கோவையில் முகாமிட்டுள்ள தனிப்படை போலீசார், நகைகளை விற்க கொள்ளை கும்பல் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படும் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள நகைக்கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இணைய சேவை துண்டிப்பு: கொள்ளை சம்பவத்தை கடந்த 10 நாட்களாக திட்டமிட்ட முருகன், திருட்டில் ஈடுபடுவதற்கு முன்பு அரும்பாக்கம் வங்கி கிளையின் இணைய சேவையை துண்டித்து விட்டதாகவும், இதனால் வங்கியின் செயல்பாடு டெல்லியின் தலைமையகத்திற்கு தெரியாமல் முடக்கப்பட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.