அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கு : அம்புட்டு நகைகளும் மீட்கப்பட்டாச்சுப்பா.. காவல்துறை விளக்கம்..!

31.700 கிராம் தங்கத்தை மொத்தமாக மீட்ட காவல்துறை..!

அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கு : அம்புட்டு நகைகளும் மீட்கப்பட்டாச்சுப்பா.. காவல்துறை விளக்கம்..!

காவல்துறை விளக்கம்: அரும்பாக்கம் தனியார் வங்கி கொள்ளை வழக்கில் கொள்ளையர்களிடம் இருந்து எங்கெங்கு, எவ்வளவு நகைகள் மீட்கப்பட்டது என்பது குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

தனியார் வங்கி கொள்ளை: கடந்த 13 ஆம் தேதி கொள்ளை அரங்கேறிய நிலையில் 15 ஆம் தேதி கோயம்பேடு  பேருந்து நிலையத்தில் வைத்து கொள்ளையன் சந்தோஷிடம் இருந்து 15.951 கிலோ கிராம் தங்க நகைகளும், பாலாஜியிடம் இருந்து 63 கிராம் பிரேஸ்லெட் பறிமுதல் செய்ய்பட்டதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.

தேதி வாரியாக நகைகள் ஒப்படைப்பு: 

அ) 17 ஆம் தேதி ஆய்வாளர் அமல்ராஜிடம் பறிமுதல் செய்யப்பட்ட 3.590 கிலோ கிராம் நகைகள் அண்ணாநகர் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது

ஆ) 18 ஆம் தேதி சூரியாவிடம் இருந்து  8.827 கிலோ கிராமும், செந்தில் குமரனிடம் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து 80 கிராமும், முக்கிய குற்றவாளியான முருகனிடம் இருந்து 373 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ) மேலும் கொள்ளையன் சந்தோஷின் உறவினர் வீட்டில் 2.656  கிலோ கிராம் தங்கமும், 

ஈ) 19 ஆம் தேதி வில்லிவாக்கத்தில் உள்ள பாலாஜி வீட்டில்100 கிராம் தங்கமும், 

உ) கோவையைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளரின் மருமகன் ஸ்ரீவத்சவாவிடம் இருந்து 63 கிராம் நகைகளும் என மொத்தம் 31.700 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.