சிக்கிய காவல் ஆய்வாளர்..! நீங்களே இப்படி பண்ணலாமா?

சிக்கிய காவல் ஆய்வாளர்..! நீங்களே இப்படி பண்ணலாமா?

அரும்பாக்கம் தனியார் வங்கிக் கொள்ளை வழக்கில் காவல் ஆய்வாளர் ஒருவர் கைது.


வங்கிக் கொள்ளை:

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் நகைகடன் வங்கியில், கடந்த 13 ஆம் தேதி 31. 7 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதனையடுத்து 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட முருகன் மற்றும் சூர்யா, சந்தோஷ், பாலாஜி, செந்தில்குமரன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்து கொள்ளை அடிக்க பட்ட நகைகள் கைப்பற்றப்பட்டது. 

நகைகளை மறைப்பு:

இந்நிலையில் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள கொள்ளையர்களிடம் நடத்திய விசாரணையில் அச்சிரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டில் 3.7கிலோ தங்கம் மறைத்து வைத்திருப்பதாக வாக்குமூலம் அளித்தனர். அதனடிப்படையில் மேல்மருவத்தூரில் உள்ள காவல் ஆய்வாளர் வீட்டில் இருந்து 3.7கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

பணியிடை நீக்கம்:

இந்நிலையில் கொள்ளையடித்த நகைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த காரணத்திற்காக அச்சிரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜை பணியிடை நீக்கம் செய்து காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி சத்திய பிரியா உத்தரவிட்டுள்ளார். மேலும் ஆய்வாளர் மற்றும் அவரது மனைவியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் விரைவில் அவர்கள் இருவரும் கைது செய்யப்படுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

அமலராஜ் கைது:

செய்தியாளர்களை சந்தித்த வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, அரும்பாக்கம் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 31 புள்ளி 7 கிலோ நகைகளை முழுவதுமாக மீட்டுள்ளதாகவும், இவ்வழக்கில் தொடர்புடைய மொத்தம் 7 பேரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, கொள்ளையடித்த 6.5 கிலோ நகைகளை கொள்ளையன் சந்தோஷ், அவரது உறவினரான அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டில் மறைத்து வைத்திருப்பது தெரியவந்ததால் அவற்றை பறிமுதல் செய்து காவல் ஆய்வாளர் அமல்ராஜை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.