பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?

பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?

பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டத்தில், ராமர் பாலம் பாதிக்கப்படாமல் சேது கால்வாய்த் திட்டம், அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

மாநில செயற்குழு கூட்டம் :

கடலூர் மாவட்டம் பாரதி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் கூட்டத்தில், எச், ராஜா, இசையமைப்பாளர் கங்கை அமரன், நடிகை நமிதா உள்ளிட்ட அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

இதையும் படிக்க : பால் விலையை உயர்த்தி வரும் தனியார் பால் நிறுவனங்கள்...தமிழக அரசை வலியுறுத்திய அன்புமணி ராமதாஸ்!

தீர்மானங்கள் நிறைவேற்றம் :

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டத்தில், ராமர் பாலம் பாதிக்கப்படாமல் சேது கால்வாய்த் திட்டம், அமைக்கப்பட வேண்டும், வேங்கைவயல் தீண்டாமை சம்பவத்திற்கு திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும் மற்றும் சட்டப்பேரவையில், ஆளுநருக்கு எதிராக நடந்த அராஜகத்தை கண்டிக்கிறோம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.