மாறி மாறி கமலாலயம் பறந்த ஈபிஎஸ், ஓபிஎஸ்...ஜெயக்குமார் சொன்ன ட்விஸ்ட் என்ன?

மாறி மாறி கமலாலயம் பறந்த ஈபிஎஸ், ஓபிஎஸ்...ஜெயக்குமார் சொன்ன ட்விஸ்ட் என்ன?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலையுடன் பேச்சுவார்த்தை :

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப் பினராக இருந்த திருமகன் ஈவேரா காலமானதை அடுத்து, பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்திற்கு அதிமுக சார் பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், தங்கமணி, எஸ். பி.வேலுமணி, கே பி.முனுசாமி உள்ளிட்டோர் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையின் போது, பாஜக சார் பில் எச்.ராஜா, சி. பி.ராதாகிருஷ்ணன், கே. பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தது குறிப் பிடத்தக்கது.

இதையும் படிக்க : மதுரை மீனாட்சி மிஷனில்...முதன்முறையாக புற்றுநோய்க்கான புதிய நவீன சாதனம் தொடக்கம்...!

ஆதரவு அளிக்க கோரிக்கை :

தொடர்ந்து, இடைத்தேர்தல் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தங்களது வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அண்ணாமலையிடம் அதிமுக சார் பில் கோரிக்கை வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.

பிஎஸ் முடிவு எடுப்பார் :

இந்நிலையில், சுமார் அரை மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தை நிறைவு பெற்றதை அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜெயக்குமார், பாஜகவுடனான பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தாகவும், இதுதொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தான் இறுதி முடிவு எடுப்பார் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.