பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச். ராஜாவுக்கு பிடிவாரண்ட்....

அறநிலையத்துறை அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் பா.ஜனதா தலைவர் எச். ராஜாவுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச். ராஜாவுக்கு பிடிவாரண்ட்....

கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர்ல் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா பங்கேற்று பேசினார். அப்போது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அவர்கள் வீட்டில் உள்ள பெண்களை பற்றி அவதூறாக பேசியதாக உதவி ஆணையாளர் ஹரிஹரன் விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதித்துறை நடுவர் எண் 2 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு எச். ராஜாவுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. தொடர்ந்து சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாத எச். ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம் இன்று பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.