பாஜக ஆதரவாளர் கிஷோர் கே. சாமி கைது!  

தலைவர்கள் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பரப்பிய யூ டியூபர் கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

பாஜக ஆதரவாளர் கிஷோர் கே. சாமி கைது!   

தலைவர்கள் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பரப்பிய யூ டியூபர் கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

திமுக தகவல் தொழில் நுட்ப காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிசந்திரன் பம்மல் சங்கர் நகர் போலீசில் புகார் அளித்தார். புகாரில், கிஷோர் கே ஸ்வாமி என்பவர் பாஜக ஆதரவாளராக ஊடகங்களில் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர், தனது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் தளத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணாதுரை , கருணாநிதி மற்றும் தற்போதைய தமிழக முதல்வர் மாண்புமிகு மு. க ஸ்டாலினையும் இழிவுபடுத்தும் விதமாக பதிவிட்டுள்ளார் என குறிபிடப்பட்டுள்ளது.

இதையடுத்து நேற்று நள்ளிரவு 1 மணியளவில் கைது செய்யப்பட்ட கிஷோர் கே சாமி மீது, ஐபிசி 153, 505 (1/B), 505 (1-C) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.