பொறியியல் இளங்கலை : பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்..1.50லட்சம் பேர் பங்கேற்க வாய்ப்பு..!

நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம்..!

பொறியியல் இளங்கலை : பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்..1.50லட்சம் பேர் பங்கேற்க வாய்ப்பு..!

பொதுப்பிரிவு கலந்தாய்வு:

இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ஒரு லட்சத்து 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை தொடக்கம்:

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 431 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 811 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, கடந்த 20ம் தேதி தொடங்கியது. 

668 மாணவர்களுக்கு சீட்:

முதல்கட்டமாக முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் அடங்கிய சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு, கடந்த 20ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதில், 668 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. 

பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடக்கம்:

இதனை தொடர்ந்து, கடந்த 25-ம் தேதி முதல் நடைபெறவிருந்த பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு, நீட் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்தால் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது, நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. 

பொறியியல் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பு:

வரும் நவம்பர் 13-ம் தேதி வரை 4 கட்டங்களாக நடத்தப்படும் இந்த கலந்தாய்வில், ஒரு லட்சத்து 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். நடப்பாண்டு நீட் தேர்வில் பெரும்பாலான மாணவர்களுக்கு மதிப்பெண் குறைந்துள்ளதால் பொறியியல் சேர்க்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.