நாளை பக்ரீத் பண்டிகை: ஆடு விற்பனை மந்தம்

நாடு முழுவதும் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் ஆடு விற்பனை மந்தமடைந்துள்ளதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

நாளை பக்ரீத் பண்டிகை:  ஆடு விற்பனை மந்தம்

உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகலில் ஒன்று பக்ரீத். இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் இசுலாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் இது கொண்டாடப்படுகின்றது.

வீட்டில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிடுகின்றனர். பின்னர், அதன் இறைச்சியை மூன்று சம பங்குகளாகப் பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டார் மற்றும் நண்பர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு, மூன்றாவது பங்கை, தங்கள் தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றனர்.

இதற்காக சென்னையில் செம்மறி ஆடுகள் விற்பனைக்கு வந்திருக்கிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஒருவனா நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆடு விற்பனை மந்தமாக நடைபெற்று வருவதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது ஆட்டின் விலை ஆயிரம் ரூபாய் வரை குறைந்திருப்பதாகவும், ஆனால் வியாபாரம் குறைந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.