மாட்டிறைச்சி விற்க கூடாது,..மிரட்டல் விடுத்த வட்டாட்சியரை கண்டித்து திருப்பூரில் போராட்டம்,.!

மாட்டிறைச்சி விற்க கூடாது,..மிரட்டல் விடுத்த வட்டாட்சியரை கண்டித்து திருப்பூரில் போராட்டம்,.!

மாட்டிறைச்சி விற்க கூடாது என்று எச்சரிக்கை விடுத்த வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் கூட்டமைப்பு சார்பாக திருப்பூரில் போராட்டம் நடைபெற்றது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பசுவதை சட்டம் அமலில் இருக்கிறது. அந்த மாநிலங்களில் அனுமதியின்றி மாடுகளை கொண்டுபோவதோ, வெட்டுவதோ தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு பசுவை இறைச்சிக்காக வெட்டுகிறார்கள் என்று சொல்லி பல அப்பாவிகள் தாக்கப்பட்டுள்ளனர்.

 தமிழகத்தில் பசுவதை சட்டம் அமலில் இல்லை. ஆனால் திருப்பூர் மாவட்டம்.அவிநாசியில்  மாட்டிறைச்சி விற்க கூடாது என அவிநாசி வட்டாட்சியர் மாட்டிறைச்சி கடை உரிமையாளரிடம் எச்சரிக்கை விடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். 

இந்நிலையில், வட்டாட்சியரை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளை ஒன்றிணைந்து உணவு உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பு சார்பாக அவிநாசி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.