புத்தக கண்காட்சியில் அரங்கு எண் 272-ல் இடம்பெற்ற சிறப்பு புத்தகங்கள் என்னென்ன...?

புத்தக கண்காட்சியில் அரங்கு எண் 272-ல் இடம்பெற்ற சிறப்பு புத்தகங்கள் என்னென்ன...?

சென்னையில் நடந்து வரும் 46-வது புத்தகக் கண்காட்சியில் உலக அறிஞர்கள் எழுதிய சமூக சீர்த்திருத்தங்கள் நிறைந்த புத்ததகங்கள் அதிகளவில் விற்பனையாகி வருகிறது. 

46 வது புத்தகக் கண்காட்சி:

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 6-ம் தேதி முதலே வாசகர்கள் கடல் அலை போல வந்து புத்தகங்களை வாரி சுருட்டி செல்கின்றனர். தற்போது தமிழகமா? தமிழ்நாடா என கருத்து யுத்தங்கள் வேகம் பிடிக்கும் நிலையில் வாசகர்களுக்குள் தமிழ் மீதான ஈடுபாடு அதிகமாகியே உள்ளது. 

அரங்கு எண் 272 :

தமிழ் மொழியின் புலமை குறித்த புத்தகங்களை தேடித் தேடி வாங்கி பயனடைகின்றனர் வாசகர்கள். புத்தகக்கண்காட்சியில் உள்ள அரங்கு எண் 272-ல் களம் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் மறுமலர்ச்சி தமிழர்கள், தமிழ் கடன் கொண்டு தழைக்குமோ?, தமிழகத்தில் பிற மொழியினர், மறைக்கப்பட்ட பெருந்தமிழர், தமிழன் இழந்த மண், வேலுபிள்ளை பிரபாகரன் விடுதலை போராட்ட வரலாறு, திருப்பி அடிப்பேன் முதலிய தமிழ் தேசிய கருத்துக்கள் சார்ந்த புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. 

அரங்கு எண் எஃப் 24-ல் காரல் மார்க்ஸ், பெரியார், டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை, பகத்சிங், அயோத்திதாசர், சேகுவேரா போன்ற அறிஞர்கள், இந்த சமுதாயத்துக்கு அளித்த நற்கருத்துக்கள் அடங்கிய புத்தகங்கள் காணப்பெறுகின்றன. 

இதையும் படிக்க: அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையில் நடந்தது என்ன? மீண்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது ஏன்?

அரங்கு எண் 564-ல் இந்து தமிழ் திசை அரங்கு சார்பில் வைக்கப்பட்ட சித்திரச்சோலை, மாபெரும் தமிழ்கனவு, தெற்கிலிருந்து ஒரு சூரியன், காலமெல்லாம் கண்ணதாசன், தமிழகம் வஞ்சிக்கப்பட்ட வரலாறு ஆகியவை வைக்கப்பட்டுள்ளது. 

தாய்மார்கள் பாலூட்டும் அறை:

அரங்கு எண் எஃப் 12-ல் இளையோருக்கு மார்க்ஸ், பாரிஸ் கம்யூன், மார்க்ஸ் ஏங்கல்ஸ் உள்பட கம்யூனிச சித்தாந்தங்கள் நிறைந்த மகத்தான புத்தகங்கள் பபாசி சார்பாக வைக்கப்பெறுகின்றன.  உள்ளூர் அறிஞர்களை அறிந்தது போல உலகளவில் புகழ் பெற்ற அறிஞர்களையும், மேதைகளையும் அறிந்து கொள்வதற்கு இவ்வாறான புத்தகங்கள் அதிக பயனளிக்கும் என உற்சாகமடைந்துள்ளனர் வாசகர்கள். குறிப்பாக, இந்த புத்தகக் கண்காட்சியில் தாய்மார்கள் பாலூட்டும் அறையும் ஒதுக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பம்சமாகும்.