அரும்பு மீசைக்கூட முளைக்காத நான்கு சிறார்கள்...சாலையில் சாகச பயணம்...பொதுமக்கள் அச்சம்.!!

மதுரை அருகே அரும்பு மீசைக்கூட முளைக்காத நான்கு சிறார்கள் இருசக்கர வாகனத்தில் சாலையில் சாகச பயணம் மேற்கொண்டது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

அரும்பு மீசைக்கூட முளைக்காத நான்கு சிறார்கள்...சாலையில் சாகச பயணம்...பொதுமக்கள் அச்சம்.!!

தமிழகம் முழுவதும் 18 வயதுக்கு குறைந்தவர்கள் பாதுகாப்பற்ற முறையில் வாகனங்களை இயக்குவதால் விபத்துக்கள் ஏற்படுவது அதிகரித்து வருவதை, தடுக்கவே தமிழக அரசு மூலம் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

அதன்படி உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாத, 18 வயதுக்கு குறைவான சிறார்களை மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 4 இன் படி 18 வயதுக்கு குறைவான ஒருவர் பொது இடத்தில் வாகனத்தை ஓட்டக் கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனை மீறி சிறார்களுக்கு வாகனத்தை ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் அல்லது வாகன உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ள நிலையில்,  மதுரை காந்தி மியூசியம் சாலையில் கரும்பாலை பகுதியைச் சேர்ந்த நான்கு சிறார்கள் ஒரு இருசக்கர வாகனத்தில் ஆபத்தான வகையில் வளைவுகளில் சாகச பயணம் மேற்க்கொண்டனர்.

இதனால் பெரும் விபத்து ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதால் போக்குவரத்து துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து சிறார்களுக்கு இருசக்கர வாகனத்தை இயக்க அனுமதிக்கும் பெற்றோர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.