காங்கேயம் அருகே கார் மீது பஸ் மோதி விபத்து -  ஒருவர் பரிதாப பலி !!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே கார் மீது தனியார் பேருந்து நேருக்குநேர்  மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர்.

காங்கேயம் அருகே கார் மீது பஸ் மோதி விபத்து -  ஒருவர் பரிதாப பலி !!

காங்கேயம் அருகே உள்ள செம்மங்காளிபாளையத்தை   சேர்ந்தவர் சதீஷ்குமார்(42). இவர் சொந்தமாக கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை தனது காரில் தாராபுரத்தில் இருந்து காங்கேயம் நோக்கி வந்துள்ளார்.

அப்போது மாலை சுமார் 7 மணியளவில் காங்கேயம் - தாராபுரம் சாலையில் துண்டுக்காடு பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக காங்கேயத்தில் இருந்து தாராபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ்சும், சதீஷ்குமார்  ஓட்டிவந்த காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.

இந்த விபத்தில் கார் சுக்குநூறாக உடைந்தது. காரில் வந்த சதீஷ்குமார்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக இதுகுறித்து காங்கேயம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காங்கயம் போலீசார் சதீஷிகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.