அகிம்சை முறையில் சுதந்திரம் பெற்ற தினம் இன்று!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

76வது சுத்னதிர தினத்தைக் கொண்டாடும் வகையில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், புனித ஜார்ஜ் கோட்டையில் மூவர்ண கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

அகிம்சை முறையில் சுதந்திரம் பெற்ற தினம் இன்று!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்தியாவின் 75வது சுதந்திர ஆண்டு இன்றோடு நிரைவடை கிறது. 76வது சுதந்திர ஆண்டை நோ க் கி அடியெடுத்து வை க் கும் இந்தியா, பல முன்னேற்றங் களை க் கண்டுள்ளது. அன்னியர் களின் பிடியில் இருந்து தப்பி, இன்று சுதந்திர மற்றும் ஜனநாய க நாடா க இரு க் கும் இந்தியாவின் 76வது சுதந்திர தினத்தை க் கொண்டாடும் வ கையில், புனித ஜார்ஜ் கோட்டையில், முதலமைச்சர் மற்றும் திமு க தலைவரான மு. க ஸ்டாலின் கொடியேற்றி மூவர்ண கொடி க் கு மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, தென்னிந்திய ப குதி களின் தலைமை படைத்தலைவர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதி காரி, தாம்பரம் விமானப் படைத்தள விமானப்படை அதி காரி, கிழ க் கு மண்டல கடலோர காவல்படை அதி காரி மற்றும் தமிழ க டி.ஜி.பி. சைலேந்திர பாபு, சென்னை மாந கர காவல் ஆணையர் சங் கர் ஜிவால், சட்டம் ஒழுங் கு கூடுதல் டி.ஜி.பி. ஆ கியோரை மரபுப்படி முதலமைச்சரு க் கு தலைமைச் செயலாளர் அறிமு கம் செய்து வைத்தார்.

பின்னர், போலீசாரின் அணிவ குப்பு மரியாதையை ஏற்று க் கொண்ட முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், திறந்த ஜீப்பில் சென்று போலீஸ் அலங் கார அணிவ குப்பை பார்வையிட்டார். தொடர்ந்து கோட்டை கொத்தளத்தில் தேசிய க் கொடியை முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் ஏற்றிவைத்தார். இதனையடுத்து, சுதந்திரன உரையாற்றிய முதலமைச்சர், சான்றோர் களு க் கு விருது களை வழங் கி கவுரவித்தார்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு. க ஸ்டாலின், பல அறிவிப்பு களை க் கொடுத்தார்.

  • அரசு ஊழியர் களு க் கு 3% அ கவிலைப்படி உயர்வு வழங் கப்படும்

  • சுதந்திர போராட்ட தியா கி களு க் கான சிறப்பு ஓய்வூதியம் ₹20,000-ஆ க அதி கரிப்பு; தியா கி களு க் கான குடும்ப ஓய்வூதியம் ₹10,000-ஆ க உயர்த்தி வழங் கப்படும்

  • வீரபாண்டிய கட்டபொம்மன், மருது பாண்டிய ச கோதரர் களின் வழித் தோன்றல் களு க் கு சிறப்பு ஓய்வூதியம் ₹10,000 ஆ க உயர்வு!

  • இந்திய விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் 260 ஆண்டு கால தொடர் பங் களிப்பை இளைஞர் கள் அறியும் வ கையில், சென்னையில் நவீன தொழில்நுட்ப வசதி களுடன் விடுதலை நாள் அருங் காட்சிய கம் அமை க் கப்படும்!

  • விடுதலை போராட்ட வீரர் மலையாள வெங் கிடுபதி எத்தலப்பரு க் கு ₹2.6 கோடி மதிப்பில் திருப்பூரில் நினைவு மண்டபம் அமை க் கப்படும்!

இதனைத் தொடர்ந்து பரிசு வழங் கும் விழா நடைப்பெற்றது.