120 கிலோ மீட்டர் வேகத்தில் வண்டி ஓட்டுவீங்களா? : லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய கலெக்டர் !!

நூறு நூத்தி இருபது கிலோ மீட்டர் வேகத்தில் வண்டி ஓட்டுவீங்களா என்று பள்ளி வாகன ஓட்டுனர்களை கேள்வி கேட்ட தர்மபுரி ஆட்சியர் சாந்தி. 

120 கிலோ மீட்டர் வேகத்தில் வண்டி ஓட்டுவீங்களா? : லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய கலெக்டர் !!

தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலக மைதானத்தில் பள்ளி கல்லூரி வாகனங்கள் சோதனை நடைபெற்றது. சோதனையை பார்வையிட்ட தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி பள்ளி வாகனங்களில் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது வாகன ஓட்டுநர் ஒருவரிடம் 100 120 கிலோமீட்டர் வேகத்தில் வண்டியை ஓட்டுவீங்களா என கேள்வி எழுப்பினார். அதற்கு ஓட்டுநர் குறைந்த வேகத்தில் தான் ஓட்டுவோம் என்றார். மாவட்ட ஆட்சியர் வயதானவர்கள் குறைந்த வேகத்தில் வாகனத்தை ஓட்டுவார்கள்.

இளைஞர்கள் வேகமாக வாகனத்தை ஓட்டக்கூடாது என்றும் அதி வேகமாக ஓட்டினால் மாவட்ட நிர்வாகத்திற்கும் தொடர்புடைய பள்ளிக்கும் புகார் தெரிவிக்கும் வகையில் புகார் எண் உள்ளதா என்பதை நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சில வாகனங்களில் விபத்து காலத்தில் பயன்படுத்தப்படும் சிறப்பு வழி கதவுகள் திறக்கின்றனவா என்பதனை சோதனை செய்தார். தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலக உட்பட்ட 79 பள்ளிகளில் இருந்து 432 வாகனங்களை இன்று வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சோதனை செய்தனர்.