ஈபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளர் தீர்மானம் செல்லாது.. உயர்நீதிமன்றத்தில் புதிய மனு..!

ஜூலை 11-ல் இயற்றிய தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும்..!

ஈபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளர் தீர்மானம் செல்லாது.. உயர்நீதிமன்றத்தில் புதிய மனு..!

அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் செல்லாது:

அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்க கூடாது என உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

நீதிமன்றத்தில் வழக்கு:

திண்டுக்கல் மாவட்டம் களத்துப்பட்டியை சேர்ந்த அதிமுக உறுப்பினர் எஸ்.சூரியமூர்த்தி தாக்கல் செய்துள்ள மனுவில், அதிமுக விதிகளுக்கு முரணாக கடந்த ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

தீர்மானங்கள் செல்லாது:

அந்த வழக்கில் இறுதி முடிவெடுக்கும் வரை இடைக்கால பொதுச் செயலாளராக ஈபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது என உத்தரவிடுமாறு கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு அடுத்தவாரம் விசாரணைக்கு வரவுள்ளது.

இதையும் படிங்க: பள்ளிக் கல்வித்துறையில் 151 புதிய பணியிடங்கள்..!