மின்வாரிய ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... மாற்றுப்பணி உத்தரவுகள் ரத்து...

மின்வாரிய ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மாற்றுப் பணி உத்தரவுகள் ரத்து 

மின்வாரிய ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... மாற்றுப்பணி உத்தரவுகள் ரத்து...
மின்வாரிய ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மாற்றுப் பணி தொடர்பான உத்தரவுகள் ரத்து செய்யப்படுவதாக வாரிய பணியமைப்புப் பிரிவின் தலைமைப் பொறியாளர் தெரிவித்துள்ளார்.
 
இதுத்தொடர்பாக அவர் அனைத்துத் தலைமைப் பொறியாளர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், மாற்றுப் பணி உத்தரவில் பணிபுரியும் களப் பணியாளர்கள் மட்டுமில்லாமல் அனைத்து மதிப்பீட்டாளர், மதிப்பீட்டு அலுவலர், எழுத்துத்துறைச் சார்ந்த பணி மற்றும் தொழில்நுட்பப் பணியாளர், பொறியாளர்கள் மற்றும் அனைத்து பணியாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ள மாற்றுப் பணி உத்தரவுகளை ரத்து செய்யப்படுவதாகவும், அனைவரையும் அவரவர் சொந்தப் பணியிடங்களுக்கு அனுப்பபட வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன்படி, மாற்றுப் பணி உத்தரவுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, அது தொடர்பான அறிக்கையை ஜூலை 27ம் தேதிக்குள் தலைமையகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.