தமிழகத்தில் இரவு நேர, ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து.!!

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ள தமிழக அரசு பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் பள்ளி கல்லூரிகளை திறக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் இரவு நேர, ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து.!!

நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு, புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுத்தியது. அதன்படி, இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை கடைபிடிக்க உத்தரவிட்டது. ஜனவரி 31-ஆம் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.  

இந்த நிலையில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு திரும்ப பெறப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என்றும்  மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.