நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைக்கக்கோரிய வழக்கு : உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி, நாளை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைக்கக்கோரிய வழக்கு : உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு, விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இந்நிலையில், தேர்தல் தொடர்பான அனைத்து கட்சி கூட்டம், மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பெரும்பாலான கட்சிகளின் பிரதிநிதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றி தேர்தலை விரைந்து அறிவிக்க வேண்டும் என்றும், ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அனைத்து கட்சிகளின் கருத்துகளை கேட்டறிந்த மாநில தேர்தல் ஆணையம், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிப்பை, நாளை வெளியிட திட்டமிட்டுள்ளது. தேர்தலை அமைதியாக நடத்த, அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு தருமாறு, மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டு உள்ளது.

இதற்கிடையே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை இன்று விசாரிப்பதாக உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.  அதன்படி இன்றைய வழக்கு விசாரணையின்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விவகாரம் குறித்த பிரச்னைக்கு முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.