நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய மத்திய நிபுணர் குழு தமிழகம் வருகை

நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய, மத்திய நிபுணர் குழு விரைவில் தமிழகம் வர உள்ளதாக, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் கூறியுள்ளார்.

டெல்லியில் மத்திய உணவு மற்றும் பொது விநியோக துறையின் இணை செயலாளர் பார்த்தா.எஸ்.தாசை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 17 மாவட்டங்களில் சராசரி அளவை விட அதிக மழை பெய்துள்ளதால், அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகளில் ஈரத்தன்மை அதிகமாக உள்ளதாகவும், எனவே 22 சதவீத ஈரப்பதத்துடன் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி, கோரிக்கை மனுவை வழங்கியுள்ளார்.

இதனை ஏற்பதாக தெரிவித்த தாஸ், தமிழகத்துக்கு விரைவில் தொழில்நுட்ப நிபுணர்கள் குழுவை அனுப்பி, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதாக, ஏ.கே.எஸ். விஜயன் தெரிவித்துள்ளார்.