சென்னையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 3வது நாளாக மழை வெளுத்து வாங்கியது.

நேற்று மதியம் முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், கோடம்பாக்கம், தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. இரவிலும் மழை நீடித்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

தொடர்ந்து தேங்கிய நீரையும், முறிந்த மரங்களையும் அகற்றும் பணி தீவிரமடைந்துள்ளது. அதே நேரத்தில், சென்னை கிண்டி ரயில் நிலையம் சுரங்கப்பாதையில் முழங்கால் அளவுக்கு நீர் தேங்கி இருப்பதால் பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் இன்றும் சென்னையில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்திற்கு திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.